தவெக அரசின் 2வது முதலீடு மாநாடு; ரூ.58,214 கோடியில் முதலீடுகள்
தவெக அரசின் 2வது முதலீடு மாநாட்டில், ரூ.58,214 கோடியில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
தவெக அரசின் 2வது முதலீடு மாநாடு
தவெக அரசின் இரண்டாவது 'வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாடு 2026' சென்னை கோவளத்தில் இன்று தொடங்கியது.

இந்த மாநாட்டில் சுமார் ரூ.58,214 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன.
மேலும், 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
7,925 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டி வைத்தார்.
5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வுசெய்யப்பட்ட 18 நபர்களுக்கு முதல்வர் விஜய் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இரண்டாவது வெற்றி முதலீட்டு மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ஆட்சிப் பொறுப்பேற்ற 200 நாட்களில் ரூ.1.73 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.