தவெக அரசுக்கு முதுகெலும்பு ஏது? திமுக காட்டமான அறிக்கை

DMK TVK
By Fathima Oct 22, 2026 03:21 AM GMT
Report

தேசிய காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சென்னையில் உள்ள மாநில காவல்துறை தலைமையகத்தில் காவல்துறை சேவையில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட காவலர்கள் அணிந்து கொண்ட பேட்ஜில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் காவல்துறை கொடி நாள் என எழுதப்பட்டிருந்ததாக தெரிகிறது.

இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை.

தவெக ஆட்சியில் அது “இந்தியும் ஆங்கிலமும்” என்ற இருமொழிக் கொள்கையாக மாறிவிட்டதா? காவல் துறை கொடி நாளில், இந்தியும், ஆங்கிலமும் மட்டும் இடம்பெற்றுள்ள பேட்ஜை தமிழ்நாடு காவலர்கள் சீருடையில் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது ஏன்?

தவெக அரசுக்கு முதுகெலும்பு ஏது? திமுக காட்டமான அறிக்கை | Tvk Government Have Any Backbone Dmks Question

காவல்துறை என்பது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட துறை என்பதை, அந்தத் துறையைத் தனது நேரடிப் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் அறிவாரா?

அல்லது மாநிலத்தின் மொழி உரிமையோடு சேர்த்து, காவல்துறை மீதான தனது அரசியல் பொறுப்பையும் ஒன்றிய அரசிடம் ஒப்படைத்து சரணடைந்துவிட்டாரா?

தமிழ்நாட்டில் தமிழ் கேட்பது கூட இன்று ஒரு கேள்வியாக வேண்டிய நிலை வந்திருப்பதே வேதனை.

குறிப்பு: பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு அழுத்தத்தை கொடுத்த நிலையில் திராவிட மாடல் அரசு ஒருபோதும் அதை ஏற்காமல் இருந்தது. . இன்றைய அரசுக்கு முதுகெலும்பு ஏது !” எனக் குறிப்பிட்டுள்ளது.