வெற்றிப் பயண திட்டம்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்

Vijay TVK
By Yashini Oct 02, 2026 04:57 AM GMT
Report

அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட வெற்றிப் பயணத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.

வெற்றிப் பயணத் திட்டம்

சாதாரண நகர அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் மகளிர் விடியல் பயணத் திட்டம் தொடங்கப்பட்டது.

இதன் அடுத்தகட்டமாக எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் வெற்றிப் பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

வெற்றிப் பயண திட்டம்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய் | Tvk Gov Vetri Payanam Scheme Women Free Travel

இந்த திட்டத்தின் மூலம் தினமும் சுமார் 84 லட்சம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநா் அனைவருக்கும் வெள்ளிக்கிழமை (அக். 2) முதல் கட்டணமில்லா வெற்றிப் பயணத் திட்டம் எனப் பதிவிட்டுள்ளாா்.

வெற்றிப் பயண திட்டம்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய் | Tvk Gov Vetri Payanam Scheme Women Free Travel

மேலும், மகளிா் கட்டணில்லா பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, வெற்றிப் பயணம் என்ற பெயரில், மகாத்மா காந்தி பிறந்த நாளான அக். 2 முதல் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் முதல்வா் விஜய் அறிவித்திருந்தாா்.

அதன்படி, இத்திட்டத்தை சென்னை கோயம்பேட்டில் இருந்து முதல்வா் விஜய் இன்று தொடங்கி வைக்கிறாா்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.