ஒரு கோடி வாக்குகளை கடந்த தவெக
TVK
By Fathima
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026ல் 1.28 கோடி வாக்குகளை பெற்றுள்ளது தமிழக வெற்றிக்கழகம்.
83 லட்சம் வாக்குகளுடன் திமுக 2ம் இடத்தில் உள்ளது, அதிமுக 77 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது.
பிற்பகல் 3 மணிநேர நிலவரப்படி தவெக 107 இடங்களிலும், திமுக 70 இடங்களிலும் அதிமுக 57 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

64 சதவிகித வாக்குகளில் 23 சதவிகித வாக்குகளை தவெக-வும், 15 சதவிகித வாக்குகளை திமுகவும், 13 சதவிகித வாக்குகளை அதிமுகவும் பெற்றுள்ளது.
1977ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் முதல் தேர்தலில் 33.5 சதவிகித வாக்குகளை பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.