தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது ; தொண்டர்கள் அதிர்ச்சி - நடந்தது என்ன?

Vijay Chennai Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Dec 30, 2024 12:00 PM GMT
Report

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ஆம் தேதி கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

anna university

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல்களுடன் FIR வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விஜய் கடிதம்

இந்த சம்பவம் தொடர்பாக அரசை கண்டித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தவெக தலைவர் விஜய்யும் இதற்கு தனது கண்டனங்களை தெரிவித்து இருந்தார். 

vijay letter

இந்நிலையில் விஜய் இன்று தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்து தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டிருந்தார்.

ஆனந்த் கைது

இந்த கடித நகலை தவெக தொண்டர்கள், மாநிலம் முழுவதும் பொது மக்களுக்கு விநியோகித்தார்கள். இதே போல் சென்னையில் விநியோகித்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறையினர் தவெக பெண் நிர்வாகிகளை கைது செய்து திநகரில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். 

tvk bussy ananth arrset

தவெக தலைவர் விஜய்யுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க சென்ற ஆனந்த், அந்த சந்திப்பிற்கு பின் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகளை காண சென்றார். அப்போதும் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலை மறியல்

ஆனந்த்தின் கைதுக்கு தவெக தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அனுமதியின்றி கூட்டத்தை கூட்டியதாக கூறி தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனந்தை விடுதலை செய்ய வலியுறுத்தி அந்த மண்டபம் முன்பு குவிந்த தவெக தொண்டர்கள் காவல்துறையினருக்கு எதிராக முழக்கமிட்டு கொண்டே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் அவர்களையும் கைது செய்தனர்.