சாதி வெறியன் என்று பெருமை பேசியவருக்கு சீட்.., தவெக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது.
இதில் நீண்ட காலமாக விஜய்க்கு வேலை செய்தவர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு, அலுவலகத்தை முற்றுகையிட்டு சத்தம் எழுப்பினர்.
சுபாஷ் சந்திரன் என்பவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். வேறு யாருக்காகவும் வேலை செய்ய மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.
மேலும், முகம் தெரியாத, உறுப்பினர் கார்டு கூட இல்லாதவருக்கு சீட் வழங்கப்பட்டதாக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையில் கம்பம் தொகுதி வேட்பாளார் ஜெகநாத் மிஸ்ராவின் சர்ச்சைக்குரிய பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அவர் சாதி குறித்து பேசியதாக விமர்சனம் எழுந்து, அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் கட்சிக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடியில் ஸ்ரீநாத்க்கு சீட் வழங்கப்பட்டது. அவர் விஜய்யின் நண்பர் என்பதால் மட்டுமே இந்த முடிவு எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விஜய்யின் நண்பர் என்ற ஒரே காரணத்துக்காக சீட் கொடுக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதற்கு உள்ளூர் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.