5 நாள் தான் டைம்.. விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த பகுஜன் சமாஜ் கட்சி! என்ன காரணம்?
தவெக கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும் எனப் பகுஜன் சமாஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தவெக கட்சி
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் கடந்த ஆக.22-ம் தேதி கட்சிக் கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்தார். அந்த கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்று இருந்தனர்.
அப்போது விஜய் கட்சிக் கொடியில், தங்களது சின்னமான யானையைப் பயன்படுத்தி இருக்கிறார்.தேர்தல் நேரத்தில் இது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். விஜய் கட்சிக் கொடியிலிருந்து யானை படத்தை நீக்க வேண்டும் எனகோரி பகுஜன் சமாஜ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது.
இதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்துக்கு, தற்காலிக சின்னம்தான் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்புதான் ஒரு கட்சி விண்ணப்பித்து சின்னத்தைப் பெற முடியும். அரசியல் கட்சிகளின் கொடிக்கு, தேர்தல் ஆணையம் ஒருபோதும், ஒப்புதல், அங்கீகாரம் வழங்குவது இல்லை.
எச்சரிக்கை
கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது எனப் பதில் அளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி தவெக கட்சியின் முதல் மாநாடு நடைப்பெற உள்ளது.
இந்த சுழலில் த.வெ.க தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணைத் தலைவர் சந்தீப், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில்
தவெக கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும் . 5 நாட்களுக்குள் கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.