இந்தியா கூட்டணி கூட்டம்; முதல்முறையாக பங்கேற்கும் தவெக
tvk first time to participate in india alliance: இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் முதல்முறையாக தவெக பங்கேற்க உள்ளது.
இந்தியா கூட்டணி
எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் முறைகேடு தொடர்பாக டெல்லியில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், நாடு முழுவதும் ஜனநாயகத்தை காப்போம் என்ற பெயரில் போராட்டம் நடத்துவது,தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்வது, ஜனாதிபதியை சந்தித்து மனு அளிப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
முதல்முறையாக பங்கேற்கும் தவெக
இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்த போரட்டங்களை முன்னெடுப்பது குறித்து சென்னை சத்யமூர்த்தி பவனில் இன்று காலை 11 மணிக்கு இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ள உள்ளன.

மேலும், முதல்முறையாக இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் தவெகவும் கலந்து கொள்ள உள்ளது.
தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழில் பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை - அதிபரின் அதிர வைக்கும் குற்றச்சாட்டு: அதிகாரிகள் தூக்கத்தில்..! IBC Tamil
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan