3ம் ஆண்டில் தவெக: விஜய்யின் அடுத்த நகர்வு! நேரலை வீடியோ காட்சிகள்
தமிழக வெற்றி கழகம் இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது, இதனையடுத்து காலை 11 மணிக்கு பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.
இவ்விழாவில் கலந்து கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியேற்றி வைக்கும் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்.
இதனை தொடர்ந்து இன்று காலை விஜய் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தள பதிவில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம்.
நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு இன்று தொடங்குகிறது. இந்த இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்திருக்கிறோம்.
அதை தாண்டி நீள்கிறது நம்முடைய அரசியல் பெரும் பயணம். தமிழகத்தில் முதன்மையான அரசியல் சக்தியாக பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாக கலந்து நின்றவர்கள் நாம் என்பதை மறந்துவிடக் கூடாது.
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
— TVK Vijay (@TVKVijayHQ) February 2, 2026
வணக்கம்.
நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.
முதன்மை அரசியல் சக்தியாகப்…
இதை நாடறியும். நல்லவர்களும் அறிவார்கள். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களை புறந்தள்ளி விட்டு, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் தமிழக வெற்றிக் கழகம். வராலும் விலக்க இயலாத விரிவானம்.
அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும். சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றி போர்முரசம் நம்முடைய தவெக. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் களம் என்பது இதுவரை இல்லாத புதிய சூழலை சுமந்து நிற்கிறது.
இதற்கு ஒரே ஒரு காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே. இந்த விஷயத்தை தான் எல்லோரும் சொல்கின்றனர். எனவே இந்த சூழலில், களத்தை நமதாக்க போராடுவோம்.
தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கி நடைபோடுவோம்.
அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாக களமாடி, ஆட்சி பீடத்தை கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என்று பதிவிட்டுள்ளார்.