பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த விஜய்

Vijay Thamizhaga Vetri Kazhagam Women
By Fathima Mar 07, 2026 12:50 PM GMT
Report

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் நடந்த சர்வதேச மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வில் பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார் நடிகர் விஜய்.

* பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் புதிய துறை உருவாக்கப்பட்டு, அது என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும். இது என்னுடைய முதல் தேர்தல் வாக்குறுதி ஆகும்.

* மாநில, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு தவிர, 60 வயது வரையுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும்.

* அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் மூலம் ஆண்டுகளுக்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். 

* திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கமும், ஒரு தரமான பட்டு புடவையும் அண்ணன் சீராக வழங்கப்படும்.

* வெற்றிப் பயணம் திட்டத்தில், அரசு போக்குவரத்தின் கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்.  

* பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணி வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும்.  சாதாரண உடையில் இருக்கும் அந்தப் பெண்கள் படை, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.  

* பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க அஞ்சலையம்மாள் அதி விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும். 

* ரேசன் கடைகள், பள்ளி, கல்லூரிகளில் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா நாப்கின் வழங்கப்படும்.

* தனியார் ஷேர் ஆட்டோ உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் ஸ்மார்ட் பேனிக் பட்டன்கள் அமைக்கப்படும்.  

* காமராஜர் கல்வி உறுதித் திட்டம் மூலம் 1 முதல் +2 வரை பயிலும் மாணாக்கர்களின் தாய் (அ) பாதுகாவலருக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும்.

* தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் குழந்தை வரவேற்புப் பெட்டகத்துடன் (Baby Welcome Kit) வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.