விஜய் நாளை பதவியேற்பு? அமைச்சரவையும் பதவியேற்குமா?

Vijay TVK
By Fathima May 06, 2026 03:34 AM GMT
Report

தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்கப்படலாம் என கூறப்படும் நிலையில் அவருடன் அவரது அமைச்சரவையும் பதவியேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக முதலமைச்சராக விஜய் நாளை பதவியேற்கவுள்ளதாகவும், நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

இன்று ஆளுநர் ஆட்சியமைக்க உரிமை கோருவார் என தெரிகிறது, இந்நிலையில் விஜய் பதவியேற்கும்போதே அவரது அமைச்சரவையும் பதவியேற்குமா அல்லது வேறொரு நாளில் பதவியேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய் நாளை பதவியேற்பு? அமைச்சரவையும் பதவியேற்குமா? | Tvk Cm Vijoy Take Oath Tomorrow

காங்கிரசிடம் தவெக ஆதரவு கோரியுள்ள நிலையில், பாஜக அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறக்கூடாது என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்-க்கு இன்னும் 11 எம்எல்ஏ-க்கள் தேவை எனும் பட்சத்தில் இரண்டு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தவெக குறிப்பிட்டுள்ளது.