எடப்பாடி பழனிசாமிக்குத் தோல்வி பயம்... கடுமையாக விமர்சித்த விஜய்!
சொந்தத் தொகுதியிலேயே தோற்றுவிடுவோம் எனும் அச்சத்தில்தான் நமது சின்னத்தையே திருடிவிட்டார் என எடப்பாடி பழனிசாமியை குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடுமையாக சாடியுள்ளார்.
தவெக தலைவர் விஜய், இன்று பாலவாக்கம் அம்பேத்கர் சிலை, திருவான்மியூர் நாகாத்தம்மன் கோவில் சந்திப்பு, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அண்ணா சாலை கலைஞர் வளைவு - ஜூனிஸ் சாலை சந்திப்பு ஆகியவற்றின் வழியாக வாகனப் பிரசாரம் மேற்கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன் போது விஜய் மேலும் தெரிவிக்கையில், “10 தடவை தோற்றவர், ‘ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் விஜய் வெளியவே வரமாட்டார்’எனச் சொல்கிறார்.
ஆனால், நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) சேலத்தின் அருகே இருக்கும் தொகுதியில் மட்டுமே பதுங்கிக்கொள்ளாமல், தமிழ்நாட்டின் வேறு ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சொந்தத் தொகுதியிலேயே தோற்றுவிடுவோம் எனும் அச்சத்தில்தான் நமது சின்னத்தையே திருடிவிட்டார் என தெரிவித்துள்ளார்.