தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஒத்திவைப்பு
தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெறுவதாக கூறப்பட்ட நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து களமிறங்குகிறது விஜய்யின் தமிழக வெற்றி கழகம்.
234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.
முதற்கட்டமாக 110 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் தயாராகியுள்ளது.

இன்று அனைத்து வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தும் பிரம்மாண்டமான கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் எதிர்பாராதவிதமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது, தேர்தல் ஆணையத்திடம் பெற வேண்டிய சில முக்கிய அனுமதிகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியான நடைமுறைகளில் ஏற்பட்ட காலதாமதமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
மேலும் அறிமுகக் கூட்டம் நாளை மறுநாள் (மார்ச் 29) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan