விஜயின் சிலையை வைத்து பிரச்சாரம் செய்யும் தவெக வேட்பாளர்
தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
அவர் பெரம்பூரில் 30ஆம் தேதியும், திருச்சி கிழக்கில் 2ஆம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதன்பிறகு அந்த 2 தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்துள்ள விஜய் மற்ற இடங்களுக்கு இன்னும் செல்லவில்லை.
சென்னையில் சில இடங்களில் அனுமதி கேட்டு, கிடைத்த பிறகு ரத்து செய்ததால், அவர் பிரசாரத்திற்கு வருவாரா என்ற சந்தேகம் உள்ளது.

இந்நிலையில், திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் நவல்பட்டு விஜி, விஜயின் ஐந்தரைஅடி உயர சிலையை வைத்து வாக்கு சேகரித்து வருகிறார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் போது கூட அந்த சிலையுடன் ஊர்வலம் வந்தார். நேற்றும் பல இடங்களில் அந்த சிலையை வாகனத்தில் வைத்து பிரசாரம் செய்தார்.
விஜய் நேரில் வர மாட்டார் என்பதால், அவருக்கு பதிலாக சிலையை பயன்படுத்தி வாக்கு கேட்கிறார் என கூறப்படுகிறது.