வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பாதுகாப்பு குறைப்பாடு - தவெக குற்றச்சாட்டு
தமிழக வெற்றி கழத்தின் வேட்பாளர் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பாதுகாப்பு குறைப்பாடு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி அமைதியான முறையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

எதிர்வரும் மே நான்காம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், EVM மெஷின்கள் ஸ்டாரங் ரூமில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தவெக வேட்பாளர் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பாதுகாப்பு குறைப்பாடு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் சின்னம் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் 233 தொகுதிகளில் போட்டியிள்ளது.
தற்போது அனைத்து கட்சிகளும் தேர்தல் முடிவுக்காக காத்திருப்பில் உள்ள நிலையில், தவெகவின் உத்தேச அமைச்சரவை பட்டியல் என புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோவையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக தவெக வேட்பாளர் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பில் பொள்ளாச்சியில் தவெக வேட்பாளர் ஸ்ரீதரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அனைத்து கட்சிகளை சார்ந்த ஏஜென்ட்கள் முன்பாக இவிஎம் மெஷின், விவிபேட் இயந்திரங்களுக்கு சீல் வைப்பார்கள். கோவை தொழில்நுட்ப கல்லூரியில் பத்து தொகுதிகளுக்கான இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
வால்பாறை தொகுதிக்கான மெஷினும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த அறை சரியாக சீல் செய்யப்படவில்லை. இந்த பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக ஏதாவது பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
கிட்டத்தட்ட 1,49,000 வாக்குகள் அங்கு உள்ளன. மக்களுடைய உரிமை அது. நான் புகார் தெரிவித்த சமயத்தில், அது பெரிய பிரச்சனை இல்லை என்கின்றனர். வேட்பாளர் புகார் அளிக்கும் போது, அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.