விஜய் முதல்வராவதில் தாமதம் - விபரீத முடிவை எடுக்கும் தவெக தொண்டர்கள்

Vijay Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Karthikraja May 09, 2026 09:43 AM GMT
Report

 விஜய் முதல்வராவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், தவெக தொண்டர்கள் சிலர் விபரீத முடிவெடுத்துள்ளனர்.

விஜய் முதல்வராவதில் தாமதம்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். 

விஜய் முதல்வராவதில் தாமதம் - விபரீத முடிவை எடுக்கும் தவெக தொண்டர்கள் | Tvk Cadres Took Wrong Decision Due Delay Vijay Cm

போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளது. 5 எம்எல்ஏக்களை வைத்துள்ள காங்கிரஸ், 20 வருட திமுக கூட்டணியை முறித்து தவெக கூட்டணியில் இணைந்தது.

மேலும், தலா 2 எம்எல்ஏக்கள் வைத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன.

தற்போது 116 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ள நிலையில், 2 எம்எல்ஏக்களை வைத்துள்ள விசிக இன்று காலை 11 மணிக்கு தங்களது முடிவை அறிவிப்பதாக தெரிவித்தது. ஆனால், தற்போது மாலை 4 மணிக்கு தங்களது முடிவை அறிவிப்பதாக தெரிவித்தளது.

விஜய் முதல்வராவதில் தாமதம் - விபரீத முடிவை எடுக்கும் தவெக தொண்டர்கள் | Tvk Cadres Took Wrong Decision Due Delay Vijay Cm

இதனால், மே 4 ஆம் திகதி முடிவுகள் வந்து விட்டாலும், 3 முறை ஆளுநரை சந்தித்தும், தவெக தலைவர் விஜய் முதலமைச்சராவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

விபரீத முடிவெடுத்த தொண்டர்கள்

இதனால் விரக்தியடைந்த தவெக தொண்டர்கள் விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அருகே புதுமை கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (40) தவெகவின் கிளை செயலாளராக உள்ளார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, விஜய் தமிழக முதல்வராக வேண்டி, 16 அடி நீளமுள்ள வேலை அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

தற்போது விஜய் முதல்வராவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், மனமுடைந்த இசக்கியப்பன் தீக்குளித்துள்ளார்.

பலத்த தீக்காயமடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதே போல், சென்னை தாம்பரத்தை சேர்ந்த தீவிர விஜய் ரசிகரான 42 வயதான மாரிமுத்து கட்டிடத் தொழிலாளியாக உள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் போது, விஜய்யால் முதல்வர் ஆக முடியாது என நண்பர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

இதனால் மனவேதனையடைந்த மாரிமுத்து வீட்டிற்கு வந்து, கொசுவத்தி சுருளை நீரில் கரைத்து குடித்துள்ளார்.

இதனையடுத்து, விஜய் ஆட்சியமைக்க முடியாது என்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே எனவே கொசுவர்த்தி சுருளை தண்ணீரில் கரைத்து குடித்துவிட்டேன் என மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

அதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, உடனடியாக மாரிமுத்துவை தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். தற்போது மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

என் தலைவன் விஜய் சிஎம் ஆக முடியவில்லை என கிண்டல் செய்கிறார்கள் அதனால் போதையில் கொசுவர்த்தி சுருளை சாப்பிட்டுவிட்டேன் என அவர் பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

முன்னதாக தேர்தல் முடிவு வெளியாகும் முன்னரே, விஜய் தோல்வியடைந்து விடுவார் என பரவிய வதந்தியால் விரக்தியடைந்த கிருஷ்னகிரியை சேர்ந்த 28 வயதான மகேந்திரன் என்ற விஜய்யின் தீவிர ஆதரவாளர்,தனது தொண்டையை அறுத்துக்கொண்டார்.

அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

பரபரப்பான தமிழ்நாடு அரசியல் களம், அடுத்து நடக்கப்போவது என்ன?