காங்கிரஸுக்கு மாநிலங்களவை சீட் வழங்கிய தவெக - முதல்வர் விஜய் அறிவிப்பு

Vijay Indian National Congress Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Jun 03, 2026 11:44 AM GMT
Report

காங்கிரஸுக்கு மாநிலங்களவை சீட் வழங்குவதாக தவெக அறிவித்துள்ளது.

காங்கிரஸுக்கு மாநிலங்களவை சீட் வழங்கிய தவெக

தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி ஆக இருந்த சி.வி. சண்முகம், சட்டமன்ற தேர்தலில் மயிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். 

இதனால் மாநிலங்களவை எம்பி காலியாக உள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பதிவு ஜூன் 18 ஆம் திகதி நடைபெற உள்ளது. 

காங்கிரஸுக்கு மாநிலங்களவை சீட் வழங்கிய தவெக - முதல்வர் விஜய் அறிவிப்பு | Tvk Allocated Rajya Sabha Seat To Congress

இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கும் நிலையில், தவெக நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

இந்நிலையில், இன்று தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநிலங்களவை எம்.பி பதவியை காங்கிரஸ்க்கு ஒதுக்குமாறு கோரிக்கை வைத்ததாகவும், அதனை பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்ததாகவும் கூறினார். 

இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha Seat) இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.