அதிமுக கூட்டணியில் இணையுமா தவெக? உறுதியாக உள்ளோம் - விஜய் நேரடி பதில்!
அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக ஒருபோதும் இணையாது என்று விஜய் தெரிவித்துள்ளார்.
அதிமுக - தவெக
தவெக சார்பாக மதுரையில் 2வது மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 21ஆம் தேதி நடக்கும் இந்த மாநாட்டின் பணிகளில் தவெக தலைவர் விஜய் கவனம் செலுத்தி வருகிறார்.
விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்தே இதுவரை எந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளருடன் கலந்துரையாடிய விஜய்,
விஜய் விளக்கம்
எனக்கு எதிராக வரும் எந்த விமர்சனத்தைக் கண்டும் கலங்குவது இல்லை. மாற்றத்தை நோக்கியே எனது பயணம் இருக்கிறது. அதிமுக - பாஜக உடன் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை. எந்தக் காரணத்தை கொண்டு பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்.
அதேபோல் முதல்வர் வேட்பாளர் யாரென்பதில் தெளிவாக இருக்கிறோம். ஏற்கனவே அறிவித்ததை போல் என்னை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால், ஏற்றுக் கொள்வோம்.
தவெகவின் ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது மட்டும்தான். அதில் எந்த சமரசமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.