தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டம் - தலைவர்களுக்கு அழைப்பு

Communist Party Of India Marumalarchi Dravida Munnetra Kazhagam Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Sep 04, 2026 01:56 PM GMT
Report

tvk alliance parties meet to be held on 9 september: செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டதில் கலந்து கொள்ளா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்ததுள்ளனர்.

தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டம்

தவெக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டம் - தலைவர்களுக்கு அழைப்பு | Tvk Alliance Parties 2Nd Meet To Held On 9 Sep

கடந்த ஜூலை 1 ஆம் திகதி சென்னை கோவலத்தில் உள்ள தனியார் விடுதியில், தமிழ்நாடு முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் தவெக தோழமை கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், சட்டமன்ற கூட்ட தொடர் செப்டம்பர் 8 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், செப்டம்பர் 9 ஆம் தேதி தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டம் நடைபெற உள்ளது.

அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு

இதில் கலந்து கொள்ள கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்தது வருகின்றனர். 

தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டம் - தலைவர்களுக்கு அழைப்பு | Tvk Alliance Parties 2Nd Meet To Held On 9 Sep

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் மு.வீரபாண்டியன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.

நாளை காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளனர். 

தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டம் - தலைவர்களுக்கு அழைப்பு | Tvk Alliance Parties 2Nd Meet To Held On 9 Sep

தவெக அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் இந்த அழைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், "ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தோம். நாங்கள் அமைச்சரவையிலும் கூட்டணியிலும் இடம்பெறவில்லை.

கூட்டணியில் இடம்பெறாமல், வெளியில் இருந்து ஆதரிப்போம். தவெகவின் முதல் கூட்டணி கூட்டம், ஒரு விருந்து தான். விருந்தில் கூட்டணி குறித்து பேசுவதில் உடன்பாடில்லை. அது குறித்து அப்போதே முதல்வரை சந்தித்து விளக்கிவிட்டோம்.

கூட்டணியில் இடம் பெறுவதில்லை என்பது தான் எங்களது நிலைப்பாடு, அதில் உறுதியாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில், கூட்டணிக்கு பெயர் வைப்பது, கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது, உள்ளாட்சித் தேர்தல் இடைத்தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.