விஜய் கட்சியுடன் கூட்டணி? உறுதிசெய்த காங்கிரஸ் நிர்வாகி
கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் நிர்வாகி கிரிஷ் சோடங்கர் கருத்து தெரிவித்துள்ளார். தவெக தரப்பில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவிக்கப்பட்டு வந்தது.
தவெகவுடன் கூட்டணி?
அதேபோல் காங்கிரஸ் நிர்வாகிகளில் திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட பலரும் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சட்டசபைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெற்றுள்ளோம். அதேபோல் திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முன்கூட்டியே தொடங்கப்பட்டு, சுமூகமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறிய புகார் தொடர்பாக கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சதீஷ் குமார், செந்தில் குமார் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளன. இந்த புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் நிர்வாகி
இது அகில இந்திய தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதேபோல் உட்கட்சி பிரச்சனையை நிர்வாகிகள் பொது தளத்தில் பகிர வேண்டாம். அதேபோல் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று நாங்கள் எப்போது சொன்னோம்?
ஒரு மாதத்திற்கு முன்பாகதான் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினோம். காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தவெகவில் யார் சொன்னது? தவெகவுடன் பேச்சுவார்த்தை என்பது வதந்தி. கூட்டணி தொடர்பாக திமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி சுமூகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் யாரோ ஒருவர் யாரையோ சந்தித்தால் நாங்கள் ஏன் பொருட்படுத்த வேண்டும்? அதேபோல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என்று எந்த கட்சியாவது சொல்வார்களா?
அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதூ கட்சிகளின் இயல்பு. தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.