ஊரடங்கு காலத்தில் நடைபெற்ற சீரியல், ரியாலிட்டி ஷோக்களின் ஷூட்டிங்...
ஊரடங்கு காலத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சீரியல், ரியாலிட்டி ஷோக்களின் ஷூட்டிங் நடைபெற்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக மகாராஷ்டிரா அரசு தொலைக்காட்சி, சினிமா மற்றும் வெப்சீரிஸ் உள்ளிட்டவற்றுக்கான படப்பிடிப்புகளுக்கு தடை விதித்திருக்கிறது. இந்த நிலையில், தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்புகளுக்கு சிக்கல் ஏற்பட குஜராத், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் ரிசார்ட்களில் படப்பிடிப்புகளை நடத்த தயாரிப்பாளர் முடிவெடுத்தனர்.
மிகக் குறைந்த செலவு ஆவதால் அனைத்து தயாரிப்பாளர்களும் இந்த முடிவை கையில் எடுத்துள்ளனர்.மகாராஷ்டிராவில் ஜூன் மாதத்தில் இருந்து படப்பிடிப்புக்கு தளர்வுகள் இருக்கும் என தகவல்கள் வெளியான நிலையில், கொரோனா சூழலில் படப்பிடிப்புகள் நடந்தது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.