டிவி விவாதங்களில் பங்கெடுக்க மாட்டோம்: அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் “ஸ்டிரைக்”
தமிழகத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளில் அரசியல் ரீதியான விவாதங்கள் நடப்பது வழக்கமான ஒன்று. இவ்விவாதங்களில் ஒவ்வொரு கட்சியினை சேர்ந்த செய்தி தொடர்பாளர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்று விவாதிப்பார்கள். ஒவ்வொரு நபரும், குறித்த தலைப்புக்கான தங்களது கட்சியின் கருத்துகளை முன்வைக்கும்போது காரசாரமான விவாதமாக இருக்கும்.
தற்போது தேர்தல் நேரம் என்பதால், ஆளும் கட்சியினர் தாங்கள் மக்கள் செய்த நலத்திட்ட உதவிகளை, செய்யப் போகும் விடயங்களையும், எதிர் கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கான விளக்கங்களையும் முன்வைத்து வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, கொரோனா கால நடவடிக்கைகள், கடன்கள் என பலதரப்பட்ட தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விவாதங்களில் அதிமுக-வின் சார்பாக ஊடகங்களில் பேசுவோர் யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதால் இனிமேல் விவாதங்களில் பங்கேற்ப போவதில்லை என அதிமுக செய்தி தொடர்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதையறிந்த கட்சியின் தலைமை அவர்களை சமாதானம் செய்து வருவதாக கூறப்படுகிறது.