திமுகவுக்கு ஆதரவளித்து சமூகவலைத்தளத்தில் இறங்கிய தொலைக்காட்சி பிரபலம்!

dmk social Karunanidhi mahaeswari
By Jon Mar 31, 2021 01:12 PM GMT
Report

திமுகவுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனப் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் மகேஸ்வரி ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் மகேஸ்வரி, தனது ட்விட்டர் பக்கத்தில் திமுகவுக்கு ஆதரவான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

மகேஸ்வரி சில நாள்களுக்கு முன்பு ட்விட்டரில், திமுகவுக்கு வாக்களியுங்கள். எந்தவொரு இரவும் விடியும், சூரியன் உதிக்கும் என்றும், தமிழை கணிப்பொறியில் ஏற்றி உலக அரங்கில் தமிழர் வாழ்வின் விளக்கை ஏற்றிய திராவிடம்.. திமுகவுக்கு வாக்களியுங்கள்.. ” என்று பதிவிட்டிருந்தார்.  

திமுகவுக்கு ஆதரவளித்து சமூகவலைத்தளத்தில் இறங்கிய தொலைக்காட்சி பிரபலம்! | Tv Celebrity Supported Dmk Social Media

இதனையடுத்து, மறுபடியும் தனது டுவிட்டர் பக்கத்தில் மகேஸ்வரி, அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் அனைத்து ஊராட்சிகளிலும் நூலகம் அமைத்து அனைத்து மாணவர்களும் பொது அறிவை வளர்த்து, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள உதவிய இயக்கம் திமுக, தலைவர் கலைஞர்.. திமுகவுக்கு வாக்களியுங்கள்.. என்று பதிவிட்டுள்ளார்.