சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?
ஒரு பக்கம் டெக்னாலஜி வளர்ந்து கொண்டே சென்றாலும் மறுப்பக்கம் ஆரோக்கியமான உணவுகள் உட்கொள்வது என்பது கேள்விக் குறியாக தான் இருந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக உலக அளவில் சர்க்கரை நோய் என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகில் அதிக சர்க்கரை நோயாளிகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா, சீனாவுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
முதியவர்கள் அதிகம் பாதிக்கும் இந்த சர்க்கரை நோய்க்கு ஆரோக்கிமான உணவுகளே மருந்தாக பார்க்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ள கூடிய ஆரோக்கியமான சில பழங்களை நாம் பார்க்கலாம்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் நார்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தை வழங்க கூடிய பழங்களில் ஒன்று.
நாவல் பழம்
நாவல் பழத்தை கண்டால் அனைவரும் வாங்கி உண்பது வழக்கம். நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளிட்ட நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது.

தினமும் 3 முறை நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவை குறைக்கலாம்.
கொய்யாப்பழம்

கொய்யாபழம் என்றால் வாங்கி உண்ணாதோர் விகிதம் என்பது அரிது. இந்த பழம் சர்க்கரை நோய் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு கொய்யாப்பழம் சிறந்த ஒரு பழம்.
குறிப்பு - தோல் நோய் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழத்தை உண்ணாமல் தவிர்ப்பது நல்லது.
பப்பாளி பழம்
பப்பாளி பழத்தில் பல ஆரோக்கியமான ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு பப்பாளி பழம் சிறந்த ஓர் பழமாகும்.
மற்ற உணவு வகைகள்
சர்க்கரை நோயாளிகள் கீரை,தக்காளி, வாழைப் பூ, பாகற்காய், வெங்காயம், கத்தரிக்காய், பூசணிக்காய், அவரைக்காய் மற்றும் வெள்ளை முள்ளங்கி ஆகியவற்றை சாப்பிட்டு வருவது நல்லது.