விவசாயிகள் கொடுப்பதால் தான் லஞ்சம் வாங்குகிறேன் - விஏஓ பேச்சால் வெடித்த சர்ச்சை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே விவசாய பயிர் காப்பீடு செய்வதற்கான அடங்கல் சான்று வழங்க கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெறுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
சில கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கும் விடுதிக்கு விவசாயிகளை வரவழைத்து அடங்கல் சான்று வழங்குவதாக கூறப்படுகிறது. மார்த்தாண்டபட்டி ஊராட்சியின் கிராம நிர்வாக அலுவலர் வினோத் என்பவர், பயிர் காப்பீடு அடங்கல் சான்று வாங்க விவசாயிகளை மணி கணக்கில் காத்திருக்க வைப்பதாகவும், விவசாயிகளிடம் தலா 100 ரூபாய் லஞ்சம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பியப்போது, விவசாயிகள் கொடுப்பதால் தான் லஞ்சம் வாங்கிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.