பயிரை தாக்க வரும் காட்டு யானையை தனியாக விரட்டியடித்த வனக்காவலர் - வைரலாகும் வீடியோ, குவியும் பாராட்டு

forestguardchasestusker viralvideoodissa tuskerchasedaway twitterpostgoesviral
By Swetha Subash Feb 18, 2022 11:41 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

பயிரை தாக்க வரும் காட்டு யானையை தனி ஆளாக நின்று விரட்டியடித்த வனக்காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஒடிசா மாநிலத்தின் ரைராகோல் வனப்பகுதியில் பயிரை தாக்க முயற்சிக்கும் ஒற்றை காட்டு யானையை வனக்காவலர் சிட்டா ரஞ்சனா என்பவர் தீயை காண்பித்து தனி ஆளாக நின்று விரட்டியடிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்த வீடியோ பதிவை சுசாந்தா நந்தா என்னும் ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “ஒடிசா மாநிலத்தின் ரைராகோல் வனப்பகுதி பிரிவிலிருந்து வனக்காவலர் சிட்டா ரஞ்சனாவுக்கு எங்களின் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

திரு சிட்டா ரஞ்சனாவின் செயல், நமது களப்பணியாளர்கள் கஷ்டங்களை எதிர்கொண்டு தினந்தோறும் செய்யும் கடின உழைப்பின் மொத்த உருவகம்.

இவர் நிலத்தில் தனி ஆளாக நின்று பயிரை தாக்க வரும் யானையைத் துரத்துகிறார்.” என பதிவிட்டுள்ளார்.

வனக்காவலரின் இந்த வீரமிக்க செயலுக்கு அவருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.