சிஎஸ்கே இல்லை; நான் ஆசைப்படும் அணி இதுதான் - துஷார் விருப்பம்!
ஐபிஎல் விருப்பம் குறித்து துஷார் தேஷ்பாண்டே தகவல் பகிர்ந்துள்ளார்.
துஷார் தேஷ்பாண்டே
2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது நாளை நவம்பர் 24-ஆம் தேதி மற்றும் நாளை மறுதினம் நவம்பர் 25-ஆம் தேதி என இரு நாட்கள் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.
இந்த மெகா ஏலத்தில் 10 அணிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மஹேந்திர சிங் தோனி, மதீஷா பதிரானா, ஷிவம் துபே ஆகிய ஐந்து வீரர்களை மட்டும் தக்க வைத்துள்ளது.
ஐபிஎல் விருப்பம்
இந்நிலையில் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட துஷார் தேஷ்பாண்டே பேசுகையில், சிஎஸ்கே அணிக்காக நான் தேர்வு செய்யப்படவில்லை என்றால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட விரும்புகிறேன். ஏனென்றால் என்னுடைய சொந்த மாநில அணி மும்பை தான்.
எனவே சொந்த அணிக்காக சொந்த மக்கள் முன்னிலையில் விளையாட வேண்டும் என்ற ஒரு ஆசை எனக்கு இருக்கிறது. எப்போதுமே சொந்த மண்ணில் சொந்த மக்களுக்கு மத்தியில் நாம் விளையாடுவது ஒரு வித்தியாசமான உணர்வு.
ஏற்கனவே நான் சிஎஸ்கே அணிக்காக வான்கடே மைதானத்தில் இரண்டு முறை விளையாடியுள்ளேன். அப்போது நான் மஞ்சள் நிறத்தில் விளையாடி இருந்தாலும் மக்கள் என்னை உற்சாகப்படுத்தினர் எனத் தெரிவித்துள்ளார்.