தமிழகத்தில் 72.78% வாக்குப்பதிவு: இறுதியான புள்ளிவிவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

india election tamilnadu vote
By Jon Apr 08, 2021 03:04 PM GMT
Report

மிழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் 72.78 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். நேற்று 7 மணி நிலவரப்படி 71% வாக்குகள் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று ஒட்டுமொத்த தகவல்களையும் பெற்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.3% வாக்குகளும் குளித்தலை 86% வாக்குகளும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் 72.78% வாக்குப்பதிவு: இறுதியான புள்ளிவிவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம் | Turnout Tamilnadu Final Figures Released Election

முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 85% வாக்குகள் பதிவாகியுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 65% வாக்குகள் பதிவாகியுள்ளன மாவட்ட வாரியாக குறைந்தபட்சமாக சென்னையில் தான் குறைந்தபட்சமாக 59% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் 74.81% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.