அளவுக்கு மீறினால் விஷமாக மாறும் மஞ்சள்-பக்க விளைவுகள் என்ன தெரியுமா?
மஞ்சள் அதிகம் சேர்த்தால் என்ன மாதிரியான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .
மஞ்சள்
மஞ்சள் என்பது இயற்கை மூலிகை. இவை மருத்துவத்திற்கும்,உணவிற்கும் ஆண்டாண்டு காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக ஆயுர்வேதத்தில் மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற உட்பொருள் மனித உடலுக்குத் தேவையான பல்வேறு நன்மைகளை வழங்கி வருகிறது.
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் . இப்படிப்பட்ட மஞ்சள் சாம்பார், ரசம், பொரியல், கிரேவி என உள்ளிட்ட சமையலுக்குக் கால் ஸ்பூன் நிறத்துக்காக மட்டும்தான் சேர்க்கிறோம் ஆனால் அதை அதிகம் சேர்த்தால் என்ன மாதிரியான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிகம் மஞ்சள் சாப்பிட்டால் செரிமான நெருப்பை அதிகம் தூண்டிவிடும். இதனால் உங்கள் உடலில் சூடு அதிகரிப்பதோடு வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். செரிமான மண்டலத்தில் சிலருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். மஞ்சளில் ரத்த உறைவை எதிர்க்கும் திறன் அதிகம் உள்ளது.
பக்கவிளைவு
இதை அதிகம் சாப்பிடும்போது அது அறுவைசிகிச்சை செய்து ரத்த உறைவு எதிர்ப்பு மருந்துகள் உட்கொண்டு வருபவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மஞ்சளில் குர்குமின் என்னும் உட்பொருள் உள்ளது. இதனால் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மைகொண்டது.
குறைந்த ரத்த அழுத்தம் கொண்டவர்கள், உயர் ரத்த அழுத்த மாத்திரைகள் உட்கொள்பவர்களுக்கு இது ரத்த அழுத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி பிரச்சினையை உண்டாக்கும் . அதுமட்டுமில்லாமல் தலைவலி மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தும். 500 முதல் 2,000 மில்லிகிராம் வரை ஒரு நாளைக்கு ஒரு நபர் எடுத்துக்கொள்ளலாம்.