நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த எம்.பி மாரடைப்பால் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்!
நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த எதிர்க்கட்சி எம்.பி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயங்கி விழுந்த எம்.பி
துருக்கி நாட்டின் நாடாளுமன்றத்தில் ஹசன் பித்மெஜ் 53) என்ற எம்.பி. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரில் துருக்கி அரசின் செயல்பாடுகளை விமர்சித்தபடி பேசிக்கொண்டிருந்துள்ளார்.
சுமார் 20 நிமிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென அவையில் மயக்கமடைந்து விழுந்துள்ளார். அவருக்கு உடனடியாக சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயிரிழப்பு
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்தும் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி நாடாளுமன்றத்தில் அவரின் கடைசி உரையானது "வரலாற்றிலிருந்து தப்பித்தாலும், கடவுளின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாது" என்று ஆளுங்கட்சியையும் இஸ்ரேலையும் விமர்சித்து பேசி தனது உரையை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.