Friday, Jul 18, 2025

இதயங்களை வென்ற இந்திய ராணுவ பெண் அதிகாரியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த துருக்கி பெண்

Government Of India Turkey Indian Army Turkey Earthquake
By Thahir 2 years ago
Report

துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய மீட்புக்குழுவினர் “ஆபரேஷன் தோஸ்த்” என்ற பெயரில் மீட்பு பணியை செய்து வருகிறார்கள்.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 

துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கிய பெண் ஒருவர் இந்திய ராணுவத்தால் மீட்கப்பட்ட பின் இந்திய பெண் ராணுவ அதிகாரியை வாரி அணைத்து கண்ணத்தில் முத்தமிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்பு என்பது அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்க இந்தியா பல்வேறு உதவிகளை தோழமை உணர்வோடு செய்து வருகிறது.

தோலோடு தோல் கொடுக்கும் இந்தியா 

மேலும் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களுக்கு இந்தியா மருத்துவப் பொருட்கள் மற்றும் மீட்பு குழுவினரை அனுப்பி வைத்து தோலோடு தோல் கொடுத்து வருகிறது.

சிரியாவுக்கு அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ள போது அந்நாட்டுக்கு உதவிகளை அனுப்புவது குறித்த கேள்விக்கு “ ஒரே பூமி ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம்” என்ற ஜி- 20 மந்திரத்தை இந்தியா பின்பற்றுகிறது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இந்தியா 250 பேரை அனுப்பியுள்ளது.

turkey-woman-kissed-an-indian-army-officer

இந்தியா அனுப்பிய 135 டன் உடையுள்ள சிறப்பு உபகரணங்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் பிற நிவாரணப் பொருட்களும் துருக்கியை வந்தடைந்துள்ளன.

உயிர் பிழைத்தவர் கொடுத்த முத்தம் 

NDRF இன் மூன்று தன்னார்வக் குழுக்கள், 150க்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்சி பெற்ற பணியாளர்கள், ராம்போ மற்றும் அவர்களது தோழமையான நாய்ப் படை, சிறப்பு வாகனங்கள் மற்றும் பிற பொருட்களுடன் துருக்கியை அடைந்துள்ளனர்.

மேலும் இந்திய ராணுவத்தின் 30 படுக்கைகள் கொண்ட நடமாடும் மருத்துவமனை அமைப்பதற்கான பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் அனுப்பபட்டுள்ளன.

turkey-woman-kissed-an-indian-army-officer

இந்த நிலையில், இந்திய ராணுவம் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் துருக்கியில் இடிபாடுகளில் சிக்கிய பெண் ஒருவர் ராணுவத்தால் மீட்கப்பட்ட பின் இந்திய பெண் ராணுவ அதிகாரியை வாரி அனைத்து கண்ணத்தில் முத்தமிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் இந்திய ராணுவம் துருக்கியர்களின் இதயத்தை வென்றுள்ளது என்பது உதாரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய பல துருக்கியர்களை மீட்டு அவர்களுக்கு தோல் கொடுத்து வருகிறது.