துருக்கி, சிரியா நிலநடுக்கம்; உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியது

Turkey Syria Death Turkey Earthquake
By Thahir Feb 14, 2023 09:53 AM GMT
Report

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது.

நிலைகுலைந்த துருக்கி, சிரியா 

கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி கிழக்கு துருக்கியின் காஸியன்டெப் நகரை மையமாக கொண்டு அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் துருக்கி மற்றும் சிரியா நிலைகுலைந்தது.

turkey-syria-earthquake-death-toll-exceeds-37k

துருக்கி மற்றும் சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாலை நிகழ்ந்த இந்த கோர நிலநடுக்கத்தால் அனைத்து கட்டிடங்களும் இடிந்து விழுந்து தரைமட்டாகின.

உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியது 

இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை என்பது 37ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தொடர்ந்து மீட்பு பணி என்பது இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

துருக்கியில் மட்டும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,643 ஆகவும், சிரியாவில் 5,700 ஆகவும் அதிகரித்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரங்களை கடந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.