இந்திய கோதுமையில் ரூபெல்லா வைரஸ்? - திருப்பி அனுப்பிய துருக்கி

By Irumporai Jun 02, 2022 01:12 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட நிலையில், துருக்கிக்கு சப்ளை செய்த கோதுமையில் ரூபெல்லா வைரஸ் கண்டறியப்பட்டதால், அவை நாடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

உலகளவில் கோதுமை ஏற்றுமதி நாடுகளில் இந்தியா இல்லாவிட்டாலும் கூட, ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக அந்நாடுகளில் இருந்து கோதுமதி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போர் காரணமாக கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையிலேயே இந்திய கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம், கோதுமை விலை 20 சதவீதம் அதிகரித்ததால், கோதுமை ஏற்றுமதிக்கான தடையை ஒன்றிய அரசு அறிவித்தது.

இந்திய கோதுமையில் ரூபெல்லா வைரஸ்?  - திருப்பி அனுப்பிய  துருக்கி | Turkey Rejects Indian Wheat Consignment

இருப்பினும், கோதுமை தடைக்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட சரக்குகளை அனுப்புவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அந்த வகையில் இந்தியாவில் இருந்து துருக்கி நாட்டுக்கு கோதுமை அனுப்பப்பட்டது. ஆனால், கோதுமை சரக்குகளை துருக்கி அரசு ஏற்க மறுத்துள்ளது.

இந்த கோதுமையில் ட்டோசானிட்டரி இருப்பதாக புகார் கூறியுள்ளனர். மேலும் கோதுமையில் ரூபெல்லா வைரஸ் தொற்று இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதனால், 56,877 மில்லியன் டன் கோதுமை சரக்கு இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்போது இந்த கோதுமை கன்டெய்னர் காண்ட்லா துறைமுகத்திலிருந்து நாடு திரும்பி உள்ளது. எனினும், இவ்விவகாரம் தொடர்பாக ஒன்றிய விவசாய அமைச்சகத்திடம் இருந்து இதுவரை எந்த பதிலும் கூறப்படவில்லை.

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதற்கு முன்பே இந்த கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வர்த்தக நிறுவனமான காம்ட்ரேட்டின் நிர்வாகி அபிஷேக் அகர்வால் கூறுகையில், ‘இந்திய கோதுமை ஆலைகளில் ரூபெல்லா நோய் தீவிர பிரச்னையாக உள்ளது.

இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சரக்குகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கோதுமையை திரும்பப் பெறுவது இதுவே முதல் முறை’ என்றார்