துருக்கி நிலநடுக்கம் - ஆலிவ் தோப்பு இரண்டாக பிளந்து 984 அடி பள்ளத்தாக்கை உருவாக்கியது...!
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கியில் உள்ள ஆலிவ் தோட்டம் இரண்டாக பிளந்து 984 அடி பள்ளத்தாக்கை உருவாக்கியுள்ளது.
துருக்கி நிலநடுக்கம்
கடந்த வாரம் திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இரு நாடுகளிலும் வெப்பநிலை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், துருக்கி மக்கள் தற்போது உறைபனியுடன் போராடி வருகின்றனர்.
இரண்டாக பிளந்த ஆலிவ் தோப்பு
இந்நிலையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கியில் உள்ள ஆலிவ் தோட்டம் இரண்டாக பிளந்து 984 அடி பள்ளத்தாக்கை உருவாக்கியுள்ளது.
ஆலிவ் தோப்பு துருக்கியின் தென்கிழக்கு அல்டினோசு மாவட்டத்தில் சிரியாவின் எல்லையில் அமைந்துள்ளது. கடந்த வாரம் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம், 7.8 ரிக்டேர் அளவுகோலில் கடுமையாக தாக்கியது.
துருக்கியின் ஆலிவ் தோட்டம் துண்டிக்கப்பட்டு, மணல் நிறத்தில், பள்ளத்தாக்கு போன்ற பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிளவு 130 அடி ஆழத்தில் (40 மீட்டர்) அதிகமாக உள்ளது.
இது குறித்து ஆலிவ் தோப்பு அருகில் வசிக்கும் மக்கள் கூறுகையில், நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அது "நம்பமுடியாத ஒலியை" உருவாக்கியது. நாங்கள் எழுந்தபோது அது ஒரு போர்க்களம் போல் இருந்தது. எதிர்காலத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை நிபுணர்கள் சரிபார்க்க வேண்டும். இது ஒரு சிறிய நகரம் அல்ல, 1000 வீடுகள் உள்ளன, 7000 ஆயிரம் மக்கள் இங்கு வாழ்கின்றனர். நிச்சயமாக, நாங்கள் பயப்படுகிறோம் என்றார்.
