நிலநடுக்க பேரழிவு - துருக்கியில் அழகாக இருந்த Hatay பாதசாரி மண்டலம் உருகுலைந்த வீடியோ...!
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அழகாக இருந்த Hatay பாதசாரி உருகுலைந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி நிலநடுக்கம்
கடந்த பிப்ரவரி 6ம் தேதி திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். பல அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த நிலநடுக்கத்தில் கீழே இடிந்து விழுந்து தரைமட்டமாயின.
இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்தால் படுகாயமடைந்துள்ளனர்.

உருகுலைந்த Hatay பாதசாரி மண்டலம்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
துருக்கியில் நிலநடுக்கத்திற்கு முன்பு இருந்த Hatayல் பாதசாரி மண்டலமும், நிலநடுக்கத்திற்கு பின்பு இருக்கும் Hatay இல் பாதசாரி மண்டலத்தின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உருகுலைந்த துருக்கியின் இந்த வீடியோவைப் பார்த்த உலக மக்கள் சற்றே சோகத்தில் ஆழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Turkey: Pedestrian zone in Hatay before and after the earthquake pic.twitter.com/XQjBrf17Jj
— ਟੋਮੈ ਬਾਆ ?? (@aMePrGQX3dSE6TX) February 22, 2023