தலைக்கு கூண்டு மாட்டி சாவியை மனைவியிடம் கொடுத்த நபர் - ஏன் தெரியுமா?
தலையில் கூண்டுடன் இருக்கும் நபரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புகைப்பழக்கம்
உலகம் முழுவதும் 71 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் புகையிலை பயன்படுத்துவதால் மட்டுமே உயிரிழக்கின்றனர். இதில் ஏறத்தாழ 9 லட்சம் பேர், புகைப்பவரின் அருகிலிருப்பதாலே பாதிக்கப்பட்டவர்கள்.
புகைப்பழக்கத்தால் உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டு, பல வித நோய்கள் ஏற்படுகிறது. சிலர் மன அழுத்தத்தை குறைக்க புகைபிடிக்க தொடங்கியதாக கூறினாலும், ஒரு கட்டத்தில் புகைப்பழக்கத்தை நிறுத்த முயன்றாலும், அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதால் நிறுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
தலைக்கு கூண்டு
இதே போல் துருக்கியை சேர்ந்த குடாஹ்யா நகரைச் சேர்ந்த இப்ராஹிம் யூசெல்(42) என்பவர், புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். 26 வருடங்களாக புகைபிடித்து வரும் இவர் நாள் ஒன்றுக்கு 2 பாக்கெட் சிகரெட்டை முடித்து விடுவாராம்.
இவரின் தந்தை புகைப்பழக்கத்தால் ஏற்பட்ட நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். இப்ராஹிம் யூசெல் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் புகைப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. இந்நிலையில் புகைப்பழக்கத்தை நிறுத்த வினோத முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளார்.
இதற்காக காப்பர் கம்பிகள் மூலம், ஹெல்மெட் வடிவிலான தலைக்கூண்டு ஒன்றை தானே உருவாக்கியுள்ளார். இதனை தனது தலையில் மாட்டி சாவியை மகள் அல்லது மனைவியிடம் அளித்து விடுவாராம்.
மனைவி ஆதரவு
இந்த கூண்டுடன் அவர் வெளியில் செல்லும் போது அனைவரும் அவரை வினோதமாக பார்த்துள்ளனர். ஆரம்பதில் இது அவரது மனைவிக்கு சங்கடத்தை அளித்தாலும், பின்னர் கணவரின் இந்த முயற்சிக்கு ஆதரவாக இருந்துள்ளார்.
[ZU9AG
சாப்பிடுவதற்கு மட்டும் மனைவி இந்த கூண்டை திறப்பார் என்றும் நீர் வருந்துவதாக இருந்தால் ஸ்ட்ரா மூலம் அருந்திக்கொள்வாராம். புகைப்பழக்கத்தை ஒழிக்க அவரின் வினோத முயற்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.