துருக்கியில் வீசும் துர்நாற்றம்.... - கழிப்பறைகள், தண்ணீர் இல்லாததால் நோய்கள் பரவும் அபாயம் - WHO எச்சரிக்கை....!

World Health Organization Turkey Syria Turkey Earthquake
By Nandhini Feb 22, 2023 09:52 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

துருக்கியில் கழிப்பறைகள், தண்ணீர் இல்லாததால் மக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக WHOன் மூத்த அவசர கால அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துருக்கி நிலநடுக்கம்

கடந்த பிப்ரவரி 6ம் தேதி திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.

பல அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த நிலநடுக்கத்தில் கீழே இடிந்து விழுந்து தரைமட்டமாயின. இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்தால் படுகாயமடைந்துள்ளனர்.

turkey-earthquake-world-health-organization

நோய்கள் பரவும் அபாயம் - WHO எச்சரிக்கை

ஐநா வளர்ச்சித் திட்டம் (UNDP)அதிகாரிகளின் கணக்கெடுப்பில், துருக்கியில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சமீபத்திய நிலநடுக்கங்களில் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

துருக்கியில் அவர்கள் தங்குவதற்கு குறைந்தபட்சம் 5,00,000 வீடுகளை உடனடியாகக் கட்ட வேண்டிய தேவை உள்ளது. இது குறித்து நேற்று UNDPன் துருக்கியின் குடியுரிமைப் பிரதிநிதி லூயிசா விண்டன் பேசியதாவது - நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட கட்டிடங்களில் 70 சதவீதத்தை துருக்கி அரசாங்கம் ஆய்வு செய்தது.

அவற்றில், 1,18,000 கட்டிடங்களில் உள்ள 4,12,000 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. ஏராளமான இடிபாடுகள் அகற்றப்பட வேண்டி உள்ளது. இது துருக்கியின் வரலாற்றில் மிகப்பெரிய இயற்கை பேரழிவு. முதல் நிலநடுக்கங்களுக்கான மீட்புப் பணிகள் முடிந்துவிட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்டு 300 மணி நேரத்திற்குப் பிறகு கடைசியாக உயிர் பிழைத்தவர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

WHOன் மூத்த அவசரகால அதிகாரி கேத்தரின் ஸ்மால்வுட் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பல இடம்பெயர்ந்த மக்கள் கழிப்பறைகள் மற்றும் சுத்தமான தண்ணீருக்கான வழி இல்லாததால், தொற்று நோய்கள் பரவும் அபாயங்கள் உள்ளது. இதை உடனே சரிசெய்ய வேண்டும். இதனால், சுவாச நோய்கள், காலரா, ஹெபடைடிஸ் ஏ மற்றும் தட்டம்மை ஆகியவை ஏற்பட ஆபத்து உள்ளது.