இடிபாடுகளிலிருந்து காப்பாற்றுங்கள்.... - மரண பயத்தோடு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்த நபர்...!

Viral Video Syria Turkey Earthquake
By Nandhini Feb 10, 2023 12:34 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இடிபாடுகளில் என் குடும்பத்தை காப்பாற்றுங்கள் என்று நபர் ஒருவர் மரண பயத்தோடு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

துருக்கி நிலநடுக்கம்

கடந்த திங்கள்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. துருக்கி மற்றும் சிரியா முழுவதும் உள்ள நகரங்களில் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 1939ம் ஆண்டுக்குப் பின் துருக்கியைத் தாக்கிய மிக மோசமான பேரிழப்பு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

turkey-earthquake-viral-video

வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்த நபர்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

துருக்கியில் உள்ள கஹ்ராமன்மாராஸ் என்ற இடத்தில் 13 பேர் கொண்ட என் குடும்பம் வீட்டின் இடிபாடுகளில் சிக்கியிருக்கிறோம். எங்களை அடியிலிருந்து மீட்டு காப்பாற்றுங்கள் என்று ஒரு நபர் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.