துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி 5-வது நாளில் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை - வைரலாகும் வீடியோ...!
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தையை 5-வது நாளில் மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
துருக்கி நிலநடுக்கம்
கடந்த திங்கள்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. துருக்கி மற்றும் சிரியா முழுவதும் உள்ள நகரங்களில் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
1939ம் ஆண்டுக்குப் பின் துருக்கியைத் தாக்கிய மிக மோசமான பேரிழப்பு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காப்பாற்றப்பட்ட 18வது உயிர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்புக்குழுவினர் தேடுதல் வேட்டையின் மூலம் மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று துருக்கியில் இடிபாடுகளில் இஸ்ரேல் தேடுதல் மீட்பு மூலம் 5-வது நாளான 18வது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இன்று காலை இஸ்ரேஸ் மீட்புக்குழுவினர் இடிபாடுகளிலிருந்து ஒரு குழந்தையை கண்டுபிடித்து உயிரை காப்பாற்றினர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மீட்புக்குழுவினருக்கு பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.
This is the 18th life saved by Israeli search and rescue in #Turkey.
— Aviva Klompas (@AvivaKlompas) February 10, 2023
This morning they located and pulled a child from the rubble. pic.twitter.com/RtSXhiZynI