துருக்கி -சிரியா நிலநடுக்கம் - அமெரிக்கா சதியா...? வெளியான அதிர்ச்சி தகவல்..!
பேரழிவை ஏற்படுத்திய துருக்கி -சிரியா நிலநடுக்கத்திற்கு அமெரிக்கா சதி செய்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி நிலநடுக்கம்
கடந்த திங்கள்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 24 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். துருக்கி மற்றும் சிரியா முழுவதும் உள்ள நகரங்களில் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
1939ம் ஆண்டுக்குப் பின் துருக்கியைத் தாக்கிய மிக மோசமான பேரிழப்பு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா சதியா...?
இந்நிலையில், இந்த நிலநடுக்கம் அமெரிக்காவின் சதியாக இருக்கலாம் என்று சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #எச்ஏஏஆர்பி (HAARP) என்ற ஹேஸ்டேக் நிலநடுக்கம் ஏற்பட்ட 2 நாட்களுக்குப் பிறகு சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங்கி வருகிறது.
இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரீடுவிட் செய்துள்ளனர். அமெரிக்க வானிலை ஆயுதமான எச்ஏஏஆர்பி துருக்கி பூகம்பத்தை ஏற்படுத்தியதாக சதி கோட்பாட்டாளர்கள் நம்புகிறார்கள். சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ள தகவல்களில் எச்ஏஏஆர்பி என்பது 'ஹை-பிரீக்வென்சி ஆக்டிவ் அரோரல் ரிசர்ச் புரோகிராம்' என்பதைக் குறிக்குமாம்.
இந்த அமெரிக்க ஆராய்ச்சி 1990களிலிருந்து செயல்பட்டு வருகிறது. இதை விமானப்படை ஆராய்ச்சி ஆய்வகம் அலாஸ்காவின் ககோனாவுக்கு அருகில் அமைந்திருக்கிறது.
இப்போது அலாஸ்கா பேர்பேங்க்ஸ் பல்கலைக்கழகத்தால் இயக்கப்படுகிறது. ரேடியோ கம்யூனிகேஷன் டெக்னாலஜியில் கவனம் செலுத்துவதே இதன் நோக்கம். இந்த புகழ்பெற்ற தொழில்நுட்பத்தை அமெரிக்க போர்க்கப்பல் செயல்படுத்தியதால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என சொல்லப்படுகிறது.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
This is what HAARP can do ↯
— Anand Panna (@AnandPanna1) February 7, 2023
Brooks Agnew, Earth Tomographer :
" Yes even cause #Earthquakes " pic.twitter.com/qwbIE3oLcn
Do you remember a few days before the earthquake in Turkey, a strange cloud appeared in the sky? Look at this cloud and the epicenter of the earthquake. (?: NY Times) pic.twitter.com/pSYr1R6mu7
— Flat Earth Zone (@FlatEarthZone) February 9, 2023