நிலநடுக்கத்திற்குப் பிறகு துருக்கி தட்டுக்கள் 5 மீட்டர் நகர்ந்தது... - பலி எண்ணிக்கை 16,000 ஐ தாண்டியது...!
நிலநடுக்கத்திற்குப் பிறகு துருக்கி 5 மீட்டர் நகர்ந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி நிலநடுக்கம்
கடந்த திங்கள்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியா முழுவதும் உள்ள நகரங்களில் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கத்திற்குப் பிறகு துருக்கி 5 மீ நகர்ந்தது
இரண்டு அண்டை நாடுகளில் 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தை ஏற்படுத்திய இரண்டு தட்டுகளின் கிடைமட்ட சறுக்கலுக்குப் பிறகு, சிரியாவுடன் ஒப்பிடும்போது துருக்கி உண்மையில் ஐந்து முதல் ஆறு மீட்டர் வரை நகர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் நிலநடுக்கத்தில் 40,000 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக தெரிவித்தள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 16,000ஐத் தாண்டியுள்ளது.
Seismologist Claims Earthquakes In Turkey Moved The Country By 5-6 Metreshttps://t.co/eQU1m8uOxV#Claims #earthquakes #Turkey #seismology pic.twitter.com/AxfpOGb5MV
— Joy Ahmed (@JoyAhme26606422) February 9, 2023