துருக்கி-சிரியா நிலநடுக்கம் - இரண்டாக பிளந்த பூமி... - வைரலாகும் வீடியோ...!

Viral Video Turkey Earthquake
By Nandhini Feb 13, 2023 02:19 PM GMT
Report

துருக்கி-சிரியா ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பூமி இரண்டாக பிளந்துள்ளது.

துருக்கி நிலநடுக்கம்

கடந்த வாரம் திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 34 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

turkey-earthquake-split-the-earth-in-half

இரண்டாக பிளந்த பூமி

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பேரழிவை ஏற்படுத்திய துருக்கி-சிரியா நிலநடுக்கம் பூமியை இரண்டாகப் பிளந்துள்ளது. துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 100 அடி ஆழமும் 650 அடி அகலமும் கொண்ட மாபெரும் பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வீடியோவைப் பார்த்த உலக மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.