துருக்கி நிலநடுக்க பயத்தில் நடுங்கி அலறிய மக்கள்... - பதற வைக்கும் வீடியோ வைரல்..!
துருக்கியில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்க பயத்தில் நடுங்கி அலறி துடித்த மக்களின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி நிலநடுக்கம்
கடந்த பிப்ரவரி 6ம் தேதி திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். பல அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த நிலநடுக்கத்தில் கீழே இடிந்து விழுந்து தரைமட்டமாயின.
இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்தால் படுகாயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தில் நடுங்கிய மக்கள்
துருக்கியில் நேற்றிரவு மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், துருக்கியில் நிலநடுக்கம் நேற்று இரவு ஏற்பட்டபோது மக்கள் பயத்தில் அலறி நடுங்கினர்.
உயிருக்கு பயந்து குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இறுக்கமாக அணைத்துக் கொண்டனர். இன்னும் சிலரோ நிலநடுக்கத்தில் அலறி பதுங்கி அலறினர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த உலக மக்கள் நெஞ்சம் உடைகின்றது.
Turkey ?? just got hit by another 6.4 magnitude earthquake. May Allah have mercy on us ? pic.twitter.com/Gup7zbwUVr
— Allah Islam Quran (@AllahGreatQuran) February 20, 2023