துருக்கியில் சிறுமியை உயிரோடு காப்பாற்றிய இந்திய மீட்புப் படையினர் - அமித்ஷா பாராட்டு…!

Amit Shah Turkey Earthquake
By Nandhini Feb 10, 2023 08:47 AM GMT
Report

துருக்கியில் இடிபாடுகளில் சிக்கிய சிறுமியை உயிரோடு காப்பாற்றிய இந்திய மீட்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

துருக்கி நிலநடுக்கம்

கடந்த திங்கள்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. துருக்கி மற்றும் சிரியா முழுவதும் உள்ள நகரங்களில் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 1939ம் ஆண்டுக்குப் பின் துருக்கியைத் தாக்கிய மிக மோசமான பேரிழப்பு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

turkey-earthquake-proud-of-our-ndrf-amit-shah

அமித் ஷா பாராட்டு

இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கிய 6 வயது சிறுமியை இந்திய மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளார்கள். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

இந்திய தேசிய பாதுகாப்பு மீட்புப் படை குறித்து பெருமைக் கொள்கிறோம். துருக்கியில் நடந்த மீட்புப் பணிகளில், காஜியான்டெப் நகரில் ஐஎன்டி-11 என்ற குழு பெரன் என்ற 6 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றியது. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், இந்திய மீட்பு படையினரை உலகின் முன்னணி பேரிடர் மீட்புப் படையாக மாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று பதிவிட்டுள்ளார்.