துருக்கி நிலநடுக்கம் - இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த பிரபல கூடைப்பந்து வீராங்கனை...!

Death Turkey Earthquake
By Nandhini Feb 14, 2023 01:37 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

துருக்கி நிலநடுக்கத்தில் பிரபல கூடைப்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

துருக்கி நிலநடுக்கம்

கடந்த வாரம் திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 37 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

turkey-earthquake-player-nilay-aydogan-dead

உயிரிழந்த பிரபல கூடைப்பந்து வீராங்கனை

துருக்கியைச் சேர்ந்த 30 வயதான துருக்கிய கூடைப்பந்து வீரர் நிலாய் அய்டோகன் துருக்கி நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து கிடந்தார். அய்டோகனின் மரணம் குறித்து அந்நாட்டில் உள்ள விளையாட்டு கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

நிலாய் அய்டோகன் துருக்கிய சூப்பர் லீக் அணியான கன்கயா பல்கலைக்கழகத்திற்காக விளையாடியுள்ளார். துருக்கியின் 2ம் பிரிவில் உஸ்மானியே, யலோவா மற்றும் மெர்சின் உட்பட துருக்கியில் தனது வாழ்க்கையில் பல அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது கூடைப்பந்து வீராங்கனை மலாய்டாவில் உள்ள தனது பாட்டியை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது. இடிபாடுகளுக்கு மத்தியில் விளையாட்டு வீராங்கனையும், அவரது பாட்டியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.