5-வது முறையாக மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம் - அலறும் மக்கள்... - பலி எண்ணிக்கை 5000ஆக உயர்ந்தது..!

Turkey Syria Turkey Earthquake
By Nandhini 1 மாதம் முன்

5-வது முறையாக மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த துருக்கி

நேற்று மற்றும் சிரியாவில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 1939ம் ஆண்டுக்குப் பிறகு துருக்கியைத் தாக்கிய மிக மோசமான பேரிழப்பு இது. துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து வரையிலும் உணரப்பட்டன. இடிபாடுகளுக்குள் நூற்றுக்கணக்கானோர் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளனர். தற்போது 4500 த்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்தில் பலியாகியுள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியா முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் நகரங்களில் மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளின் மேடுகளைத் தேடியதால் பலி எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

turkey-earthquake-people-5000-death

5-வது முறையாக துருக்கியில் நிலநடுக்கம்

இந்நிலையில், துருக்கியில் நேற்றிலிருந்து தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. தற்போது 5-வது முறையாக துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

இந்த தொடர் நிலநடுக்கத்தால் துருக்கி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். தற்போது நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.      

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.