துருக்கி நிலநடுக்கம் - பல கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கிய லயோனல் மெஸ்ஸி...!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவிற்கு நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி நன்கொடை வழங்கியுள்ளார்.
துருக்கி நிலநடுக்கம்
கடந்த திங்கள்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. துருக்கி மற்றும் சிரியா முழுவதும் உள்ள நகரங்களில் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 1939ம் ஆண்டுக்குப் பின் துருக்கியைத் தாக்கிய மிக மோசமான பேரிழப்பு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

லயோனல் மெஸ்ஸி நன்கொடை
இந்நிலையில், அர்ஜென்டினாவைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு 3.5 மில்லியன் யூரோக்களை (ரூ.31 கோடி) நன்கொடையாக வழங்கினார்.
தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த மெஸ்ஸியின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Lionel Messi Donates 3.5 Million Euros to Turkey and Syria. pic.twitter.com/UtaLK6S8uW
— Economy.pk (@pk_economy) February 10, 2023