துருக்கி இடிபாடுகளில் கட்டுக்கட்டான 2 மில்லியன் டாலர்கள் கண்டுபிடிப்பு... - வீடியோ வைரல்..!
துருக்கி நிலநடுக்க இடிபாடுகளில் கட்டுக்கட்டான 2 மில்லியன் டாலர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துருக்கி நிலநடுக்கம்
கடந்த பிப்ரவரி 6ம் தேதி திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.
பல அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த நிலநடுக்கத்தில் கீழே இடிந்து விழுந்து தரைமட்டமாயின. இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்தால் படுகாயமடைந்துள்ளனர்.

2 மில்லியன் டாலர்கள் கண்டுபிடிப்பு
இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் இடிபாடுகளில் சிக்கிய 2 மில்லியன் டாலர்களை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
??? #Turkey #earthquake: Firefighters found 2 million dollars in the wreckage. pic.twitter.com/LIV0wS55k9
— Terror Alarm (@Terror_Alarm) February 19, 2023
Teams of search and rescue workers in #Turkey have found $2 million in cash that belonged to one of the recent earthquake victims. ? pic.twitter.com/0wCWy5SC42
— No Jumper (@nojumper) February 20, 2023