துருக்கி நிலநடுக்கம்; இடிபாடுகளில் கதறிய சிறுமி - தேம்பி அழுத மீட்புப்படை வீரர்..!
துருக்கி நிலநடுக்கத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் கதறிய சிறுமியின் அழுகையை தாங்க முடியாமல் உறைந்து போய் தனியாக தேம்பி அழுத மீட்புப்படை வீரரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
துருக்கி நிலநடுக்கம்
கடந்த திங்கள்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. துருக்கி மற்றும் சிரியா முழுவதும் உள்ள நகரங்களில் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
1939ம் ஆண்டுக்குப் பின் துருக்கியைத் தாக்கிய மிக மோசமான பேரிழப்பு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

தேம்பி அழுத மீட்புப்படை வீரர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது
அந்த வீடியோவில், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கிய சிறுமி வலி தாங்க முடியாமல் மீட்புக்குழுவினரிடம் கதறுகிறாள். அவளை வெளியே எடுக்க மீட்புக்குழுவினர் சிரமப்படுகின்றனர். அச்சிறுமியிடம் மீட்புக்குழுவினர் பேச்சுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். பிறகு அச்சிறுமியை சிரமப்பட்டு மீட்புக்குழுவினர் மீட்டனர். வலியால் சிறுமியின் கதறலை பார்க்க தாங்க முடியாமல் மீட்புக்குழுவில் இருந்த ஒரு நபர் தனியாக ஓரத்தில் சென்று அமர்ந்து கதறி அழுகிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த உலக மக்களின் நெஞ்சம் ரணமாகி, "நீங்கள் வலியை உணர்ந்தால், நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள், மற்றவர்களின் வலியை உணர்ந்தால், நீங்கள் ஒரு மனிதர் என்று சோகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
"If you feel pain, you're alive. If you feel other people's pain, you're a human being.”
— ? (@ataturkcu07) February 9, 2023
Tolstoy#Turkey #Turquia #TurkeyQuake #TurkeyEarthquake #Turkiye pic.twitter.com/L1F7XqsIBK