துருக்கி நிலநடுக்கம் - பிரபல கால்பந்து வீரர் மாயம் - ரசிகர்கள் சோகம்…!

Football Turkey Earthquake
By Nandhini Feb 07, 2023 06:41 AM GMT
Report

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பிரபல கால்பந்து வீரர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி நிலநடுக்கம்

துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் துருக்கியில் நேற்று முதல் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின.

மத்திய துருக்கியில் 9.9 கிமீ ஆழத்தில் தாக்கியது. பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கினர். இந்த நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

turkey-earthquake-famous-footballer-christian-atsu

பிரபல கால்பந்து வீரர் மாயம்

இந்நிலையில், பிரபல கால்பந்து கிளப் அணிகளான செல்சியா எப்.சி மற்றும் நியூகேஸ்டில் எப்.சி அணிகளின் முன்னாள் முன்னணி வீரர் கானாவை சேர்ந்த கிறிஸ்டியன் அட்சு நிலநடுக்கத்தில் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஹடேஸ்போர் கிளப்பின் செய்தி தொடர்பாளர் முஸ்தபா ஓசத் கூறுகையில், நியூகேஸ்டில் எப்.சி அணிகளின் முன்னாள் முன்னணி வீரர் கானாவை சேர்ந்த கிறிஸ்டியன் அட்சுவை காணவில்லை. மேலும், கிளம் இயக்குநர் டானர் சவூத்தையும் காணவில்லை. இவர்கள் இருவரையும் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. இவர்கள் இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம். இவர்கள் இதுவரைத்தவிர மற்ற வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர். கானாவில் வெளியுறவுத்துறை துருக்கி அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர் என்றார்.

இந்நிலையில், செல்சியா எப்.சி. கால்பந்தாட்ட அணி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், நாங்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம், கிறிஸ்டியன் அட்சு. என்று பதிவிட்டுள்ளது. தற்போது இது தொடர்பாக செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.